India
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
உத்தர பிரதேச மாநிலம் கெரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமன் ஹூசைன். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த சூழலில் ஒரு கட்டத்தில் அவரிடம் தனது காதலை கூறி திருமணத்துக்கு ஒப்புதல் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தனது மனதில் வைத்த அமன், அந்த பெண்ணை பழி வாங்க எண்ணியுள்ளார்.
அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்னர், சிறுமி தனியாக இருந்தபோது, அவரை திட்டமிட்டு கடத்தி தனது வீட்டில் கையை கட்டி அடைத்து வைத்துள்ளார். அங்கே வைத்து அவரை தொடர்ந்து 3 நாட்கள் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார். மேலும் ஒரு சூடான கம்பியை கொண்டு அந்த பெண்ணின் முகத்தில் இந்த இளைஞரின் பெயரையும் எழுதியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பித்த சிறுமி, இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட அமன் ஹுசைனை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கையில் அமனுக்கு உடந்தையாக அவரது தாய் மற்றும் சகோதரி இருந்ததாக கூறப்படுகிறது. அமன் மீது போக்ஸோ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கடத்தி வன்கொடுமை செய்து, முகத்தில் சூடு வைத்த இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! : சுதந்திர நாள் போக்குவரத்து மாற்றம் குறித்த விவரம் உள்ளே!
-
“தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம்!” : ஆளுநரின் அத்துமீறல் தொடரும் நிலையில் இரா.முத்தரசன் திட்டவட்டம்!
-
தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க முன்வைத்த 5 கோரிக்கைகள்! - பட்டியலிட்ட என்.ஆர்.இளங்கோ எம்.பி!
-
”திராவிட மாடல் ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்து, வளர்ந்து, வளர்ச்சி” : Times of India நாளேடு பாராட்டு!
-
“முதலீடுகளை ஈர்க்க செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்ல உள்ளேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!