India
”தாலியின் முக்கியத்துவம் குறித்து நரேந்திர மோடிக்கு என்ன தெரியும்?” : பிரியங்கா காந்தி பதிலடி!
”காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பறித்து விடுவார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அண்மையில் பேசி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, "இந்த நாட்டில் என்ன பேச்சுக்கள் நடக்கின்றன?. இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பறித்து விடுவார்கள் என பிரதமர் பேசி இருக்கிறார். இந்த நாடு கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ளது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. யாருடைய தாலி (தங்கத்தை) பறித்தார்களா?
ஓராண்டுக்கு மேல் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த விவசாயிகளின் மனைவிகளின் தாலியைப் பற்றி மோடி யோசித்தாரா?. மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணின் தாலி பற்றி மோடி யோசித்தாரா? பெண்களை அச்சப்படுத்தி வாக்கு சேகரிக்க மோடி வெட்கப்பட வேண்டும்.
38 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தனது பாட்டியைப் பார்த்த பிறகும், சல்லடையாக்கப்பட்ட தனது தந்தையைப் பார்த்த பிறகும் ராகுல்காந்தி அதைச் சொல்லி வாக்குக் கேட்டதில்லை. ஆனால் மோடி ரூ.10 கோட் சூட் போட்டுக்கொண்டு நான் ஒரு ஏழைத்தாயின் மகன் ஒரு நீலிக்கண்ணீர் வடித்து வாக்குக் கேட்கிறார்.என் தாய் இந்த நாட்டிற்காக தனது தாலியை தியாகம் செய்தார். தாலியின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்று பேசி இருக்கமாட்டார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!