அரசியல்

16 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி,இதை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் தெரியுமா? -ராகுல் காந்தி

கார்ப்பரேட்களுக்கு 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி அரசின் செயலை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

16 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி,இதை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் தெரியுமா? -ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டின் சொத்துக்களை குறைந்த விலைக்கு மோடி அரசு விற்பனை செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான தீவிர நடவடிக்கையில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அம்பானி மற்றும் அதானி போன்ற மோடிக்கு நெருக்கமானவர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதையே கொள்கையாக கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொதுத்துறை நிறுவனங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கியுள்ள 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளார். இந்த நிலையில், மோடி அரசின் இந்த செயலை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

16 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி,இதை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் தெரியுமா? -ராகுல் காந்தி

இது குறித்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் 1,60,00,00,00,00,000 அதாவது 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார்

இவ்வளவு பணத்தை வைத்து 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்திருக்கலாம்

- 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்

- 10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் எண்ணற்ற தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம்

- 20 ஆண்டுகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியிருக்கலாம்

- இந்திய ராணுவத்தின் மொத்த செலவுகளையும் 3 வருடங்கள் தாங்கியிருக்கலாம்

- தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம். மோடியின் இந்தக் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories