முரசொலி தலையங்கம்

இஸ்லாமியர் பற்றி தான் பேசியது பொய்யென தெரிந்த மோடி அந்தர் பல்டி அடித்துவிட்டார்- அம்பலப்படுத்திய முரசொலி

தான் சொன்­னது பொய்­யென்று மோடிக்கு தெரி­யும். அத­னால்­தான் அதை அவரே மறைத்­து­விட்­டார்.

இஸ்லாமியர் பற்றி தான் பேசியது பொய்யென தெரிந்த மோடி அந்தர் பல்டி அடித்துவிட்டார்-  அம்பலப்படுத்திய முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (24.4.2024)

கடைசி ஆயுதத்தையும் பயன்படுத்தினார் மோடி

மோடிக்­குள் தூங்­கிக் கொண்­டி­ருந்­தது விழித்­து­விட்­டது!

ராஜஸ்­தா­னில் தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது, “காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யில் இருந்­த­போது, நாட்­டின் சொத்­துக்­க­ளில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கே முதல் அதி­கா­ரம் என்று பேசி­னார்­கள். உங்­க­ளி­டம் உள்ள தங்­கம் உள்­ளிட்ட சொத்­துக்­களை பறித்து அதிக குழந்­தை­கள் பெற்­றுக்­கொள்­ப­வர்­க­ளி­டம் கொடுத்து விடு­வார்­கள். சட்ட விரோ­த­மாக நாட்­டிற்­குள் ஊடு­ரு­வி­ய­வர்­க­ளி­டம் உங்­கள் சொத்­துக்­களை கொடுத்து விடு­வார்­கள். நீங்­கள் கஷ்­டப்­பட்டு உழைத்த பணத்தை அவர்­க­ளி­டம் கொடுக்க வேண்­டுமா? இதை நீங்­கள் ஏற்­பீர்­களா?

இதை செய்­வோம் என்­று­தான் காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­யி­ருக்­கி­றார்­கள். தாய்­மார்­கள், சகோ­த­ரி­க­ளின் தங்க நகை­களை கணக்­கெடுத்து அவற்றை உங்­க­ளி­ட­மி­ருந்து பறித்து அவர்­க­ளி­டம் கொடுத்­து­வி­டு­வார்­கள். மன்­மோ­கன்­சிங் என்ன சொன்­னார் தெரி­யுமா? நாட்­டின் சொத்­துக்­க­ளில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கே முதல் அதி­கா­ரம் எனக் கூறி­னார். சகோ­தர சகோ­த­ரி­களே இது­தான் நகர்ப்­புற நக்­சல்­க­ளின் சிந்­தனை. என் தாய்­மார்­கள், சகோ­த­ரி­க­ளின் தாலியை பறிக்க யாருக்­கும் அதி­கா­ரம் இல்லை” என்று குறிப்­பிட்­டார். ஒரு நாட்­டின் பிர­த­மர் பேசும் பேச்சா இது? அப்­பாவி மக்­க­ளி­டம் போய், ‘உங்­க­ளது வீடு, வாசல், சொத்து, நிலம் அத்­த­னை­யும் பறித்து முஸ்­லீம்­க­ளி­டம் கொடுத்­து­வி­டப் போகி­றார்­கள்’ என்று சொல்­லும் கீழான சிந்­தனை கொண்­ட­வ­ராக, இந்த நாட்­டுக்கு பத்­தாண்டு காலம் ஒரு­வர் பிர­த­ம­ராக இருந்­தி­ருக்­கி­றார் என்று நினைப்­பதே கேவ­ல­மாக இருக்­கி­றது.

அப்­படி காங்­கி­ரஸ் கட்சி தேர்­தல் அறிக்­கை­யில் இருக்­கி­றதா? இல்லை. ‘யாரு­டைய சொத்­தும் பறிக்­கப்­ப­டும்’ என்று காங்­கி­ரஸ் கட்சி தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லப்­ப­ட­வில்லை என அக்­கட்சி அதி­கா­ரப்­பூர்­வ­மாக மறுத்­துள்­ளது. அதன் தலை­வர் கார்­கே­வும் மறுத்­துள்­ளார்.எப்­போ­தா­வது மன்­மோ­கன் சிங் அவர்­கள் அப்­படி பேசி இருக்­கி­றாரா என்­றால் அது­வும் இல்லை. “பட்­டி­யல் மற்­றும் பழங்­குடி வகுப்­பி­னர், ஓ.பி.சி. பிரி­வி­னர், சிறு­பான்­மை­யி­னர், பெண்­கள், குழந்­தை­கள், குறிப்­பாக, முஸ்­லிம் சிறு­பான்­மை­யி­னர் ஆகி­யோர் நாட்­டின் வளர்ச்­சி­யின் பலன்­க­ளில் சம­மா­கப் பங்­கு­ பெ­றும் வகை­யில், புது­மை­யான திட்­டங்­களை வகுக்க வேண்­டும்.வளங்­கள் மீதான முதல் உரி­மையை அவர்­கள் பெற்­றி­ருக்க வேண்­டும். நாட்­டின் வளங்­க­ளில் ஒன்­றிய அர­சுக்கு எண்­ணற்ற பிற பொறுப்­பு­கள் உள்­ளன. அது நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் சென்று சேர­வேண்­டும்” என்று மன்­மோ­கன் சிங் பிர­த­ம­ராக இருக்­கும் போது பேசி­யுள்­ளார். இந்த நாட்­டின் அனைத்து வளங்­க­ளும் பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யி­ன­ருக்­கும், பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்­கும் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் சம­மாக, முதன்­மை­யாக வழங்க வேண்­டும் - – என்ற பொரு­ளில் மன்­மோ­கன் சிங் பேசி இருக்­கி­றார்.

இஸ்லாமியர் பற்றி தான் பேசியது பொய்யென தெரிந்த மோடி அந்தர் பல்டி அடித்துவிட்டார்-  அம்பலப்படுத்திய முரசொலி

வளம் என்­றால் கல்வி, வேலை வாய்ப்­பு­கள், அதி­கா­ரம், சலு­கை­கள், திட்­டங்­கள், பொறுப்­பு­கள் ஆகும். இது­தான் நாட்­டின் வளம் ஆகும். இதனை பகிர்ந்து தர வேண்­டும் என்­று­தான் மன்­மோ­கன் சொல்லி இருக்­கி­றார். ராஜஸ்­தா­னில் இருக்­கும் தனிப்­பட்ட ஒவ்­வொ­ரு­வர் சொத்­தை­யும் பறித்து இசு­லா­மி­யர்க்கு தரப்­போ­வ­தாக மன்­மோ­கன் சிங் சொல்­ல­வில்லை. மன்­மோ­கன் சிங் என்ன இப்­போது பிர­த­மர் வேட்­பா­ளரா? அவர் எப்­போதோ சொன்­னதை இப்­போது ஏன் எடுத்து வந்து போர்த்­திக் கொள்ள வேண்­டும்?நாட்­டின் வளம் என்­றால் என்­ன­வென்று தெரி­யா­மல், நாட்­டின் வளம் என்­றால் வீடு – - நிலம் என்று புரிந்து கொள்­ப­வர்­தான் இந்த நாட்­டில் பத்­தாண்டு காலம் பிர­த­ம­ராக இருந்­துள்­ளார். இப்­படி பேசிய பிர­த­மர் மோடி, அதி­லா­வது உறு­தி­யாக இருந்­தாரா என்­றால் இல்லை. அவ­ரது பேச்­சு­கள், அவ­ரது அதி­கா­ரப்­பூர்வ இணைய தளத்­தில் பதிவு செய்­யப்­ப­டும். ஆனால் ராஜஸ்­தா­னில் பேசிய இந்த பேச்சு அரை­கு­றை­யாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

‘இஸ்­லா­மி­யர்­கள்’, ‘ஊடு­ரு­வல்­கா­ரர்­கள்’, ‘அதிக குழந்­தை­களை பெற்­றெ­டுப்­ப­வர்­கள்’ உள்­ளிட்ட வார்த்­தை­கள் மோடி­யின் அதி­கா­ரப்­பூர்வ தளத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இந்த வார்த்­தை­களை அவர் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கான வீடியோ ஆதா­ரம் சமூக வலை­த­ளங்­க­ளில் வேக­மாக பகி­ரப்­பட்டு வரு­கி­றது. ஏன் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அதைச் சொல்ல மோடி­யால் முடி­ய­வில்லை. சொன்­னது பொய்­யென்று அவ­ருக்கே தெரி­யும். அத­னால்­தான் அதை அவரே மறைத்­து­விட்­டார். ராஜஸ்­தா­னில் மோடி பேசி­யது கடந்த 20 ஆம் தேதி. 21 ஆம் தேதி

உத்­தி­ரப்­பி­ர­தே­சம் போனார். அங்கு இசு­லா­மிய வாக்­கா­ளர்­கள் அதி­கம். ராஜஸ்­தா­னில் தான் பேசி­யது தவறு என்று அவர் நினைத்­தி­ருக்­க­லாம். உடனே அந்­தர் பல்டி அடித்­தார்.

அலி­கா­ரில் நடந்த பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் பேசும் போது, “இஸ்­லா­மிய சகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்­கா­கத்­தான், நான் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றேன். முன்பு குறை­வான ஹஜ் ஒதுக்­கீட்­டில், லஞ்­சம் கொடுத்து அங்கு செல்ல வேண்­டிய நிலை இருந்­தது. எனது இஸ்­லா­மிய சகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்­காக சவுதி இள­வ­ர­சி­யி­டம் நான் பேசி இஸ்­லா­மி­யர்­கள் ஹஜ் பய­ணம் மேற்­கொள்­வ­தற்­கான கோட்­டாவை அதி­க­ரித்­துக் கொடுத்­தேன். விசா­வும் எளி­தாக்­கப்­பட்­டது. ஆண்­கள் துணை­யின்றி பெண்­கள் தனியே ஹஜ் செல்ல முடி­யும் என்­ப­தால், இஸ்­லா­மிய சகோ­த­ரி­கள் ஆசீர்­வா­தம் எனக்கு கிடைத்­தது” என்று குறிப்­பிட்­டார். ஒரே நாளில் ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் எப்­படி அன்­பா­ன­வர்­க­ளாக மாறி­னார்­கள்? இது­தான் நிஜ மோடி. எந்­தக் கொள்­கை­யி­லும் உண்­மையோ, உள­மார்ந்த ஈடு­பாடோ இல்­லா­த­வர். தனது சுய­ந­ல­னுக்­காக எதை­யும் அர­வ­ணைப்­பார், காவு கொடுப்­பார். இந்­துக்­க­ளாக பேசும் இவர், இந்த நாட்டு இந்­துக்­க­ளுக்­காக செய்­தது என்ன? அவ­ரது விரல்­விட்டு எண்­ணக் கூடிய இந்து நண்­பர்­களை வளப்­ப­டுத்­தி­னார். இந்த நாடு வளங்­களை அமுக்­கிய விரல்­விட்டு எண்­ணக் கூடிய சிலரை இந்த நாட்டை விட்டு தப்ப விட்­டார். மற்­ற­படி இந்­துக்­க­ளுக்­காக எந்த நன்­மை­யும் செய்­யா­த­வர்­தான் மோடி.

அவ­ரது ஆட்­சி­யில் அதே இந்­துக்­க­ளுக்­கும் – இசு­லா­மி­யர்­க­ளுக்­கும் –அனைத்து மதத்­த­வ­ருக்­கும் - அனைத்து இனத்­த­வர்க்­கும் - அனைத்து மொழி­யி­ன­ருக்­கும் ஒரே வித­மான துன்­பம்­தான். இதற்கு ஒரே வித­மான முடிவு

என்­பது, அவரை ஆட்­சி­யில் இருந்து இறக்­கு­வதே! இதனை மக்­கள் உணர்ந்­து­விட்­டார்­கள். மக்­கள் உணர்ந்து விட்­டார்­கள் என்­பதை மோடி­யும் உணர்ந்­து­விட்­டார்.

banner

Related Stories

Related Stories