India
உ.பி ஹோலி பண்டிகை : இஸ்லாமியர்கள் மீது தண்ணீர் ஊற்றி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம் எழுப்பிய சிறார்கள் !
ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். வட இந்தியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகையானது வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 24,25 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு இந்த கடந்த சில நாட்களாகவே மக்கள் ஹோலியை கலர் பொடி தூவி கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி இந்த பண்டிகையை முன்னிட்டு பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் மக்கள் ஹோலி பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாடினர். அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இஸ்லாமியர்கள் மீது சிலர் வண்ணப்பொடி தூவி அத்துமீறியுள்ளனர்.
மேலும் அவர்கள் மீது வாளி நிறைய தண்ணீரையும் எடுத்து ஊற்றியுள்ளனர். அதோடு ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தையும் எழுப்பியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த இஸ்லாமியர், தனது மனைவி மற்றும் தாயுடன் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்த அத்துமீறல் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இன்று (24.03.2024) மிகவும் வைரலான நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனிருத் என்ற முக்கிய குற்றவாளி, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!