அரசியல்

மராட்டியத்தில் திணறும் பாஜக கூட்டணி : நம்பி வந்த ஷிண்டே, அஜித் பவார் அணிக்கு சீட் கொடுக்க மறுக்கும் பாஜக!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மஹாராஷ்டிராவில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது.

மராட்டியத்தில் திணறும் பாஜக கூட்டணி : நம்பி வந்த ஷிண்டே, அஜித் பவார் அணிக்கு சீட் கொடுக்க மறுக்கும் பாஜக!
-
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

மராட்டியத்தில் திணறும் பாஜக கூட்டணி : நம்பி வந்த ஷிண்டே, அஜித் பவார் அணிக்கு சீட் கொடுக்க மறுக்கும் பாஜக!

அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது. இதனிடையே தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தன்னை நம்பி வந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பாஜக துரோகம் இழைத்துள்ளதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகினறனர்.

மஹாராஷ்டிராவில் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு சிவசேனாவுக்கு 8 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளும் மட்டுமே கொடுக்க பாஜக முன்வந்துள்ளது. தற்போது சிவசேனா(ஷிண்டே) பிரிவில் மட்டும் 14 எம்.பிக்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கான இடங்களையாவது கொடுக்க ஷிண்டே பாஜகவை வலியுறுத்தி வருகிறார்.

அதே போல தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வந்த அஜித் பவார் அணி 8 சீட்களை கேட்க, அவர்களுக்கு 4 இடங்களை மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளது. இதனால் ஷிண்டே மற்றும் அஜித் பவார் கட்சியை சேர்ந்த பலர் மீண்டும் சரத் பவார், உத்தவ் தாக்கரே அணியில் இணைந்து வருகின்றனர். முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், இன்னும் மஹாராஷ்டிராவில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது.

banner

Related Stories

Related Stories