India
இந்தியாவை உயர்த்துவோம் என பொய் உறுதியளிக்கும் மோடி : உ.பி.யில் தத்தெடுத்த மாநிலமே தத்தளிக்கும் அவல நிலை!
2014- இல் தொடங்கிய மோடியின் புளுகுகள், 10 ஆண்டுகள் ஆகியும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
அப்புளுகுகளில், மிகவும் முக்கியமான புளுகாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தையும், அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தரும் திட்டத்தையும் இணைத்த “முன்மாதிரி கிராமத் திட்டத்தை” கூறலாம்.
பொதுவாகவே, பா.ஜ.க.வை பொறுத்தவரை திட்டங்களை தீட்டுவதில் இருக்கின்ற வேகமும், முயற்சியும் திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்காது.
அதற்கு சரியான எடுத்துக்காட்டு தான் ‘முன்மாதிரி கிராமத் திட்டம்’. இத்திட்டம் என்பது, அடிப்படை கட்டமைப்பில் பின் தங்கிய கிராமங்களை, மேம்படுத்தி இன்றியமையாத துறைகளான வேளாண், கைத்தொழில் போன்றவற்றில் வளர்ச்சியடைவதே.
இதற்கு 18 அடிப்படை கூறுகள் அமைக்கப்பட்டு அதன் படி, கிராமங்களின் வளர்ச்சியும் அமைந்திருக்க வேண்டும் என்பது முறை.
எனினும், 18 அடிப்படை கூறுகளும் செயல்படவில்லை. கிராமங்களில் வளர்ச்சியும் உண்டாகவில்லை. அதற்கு பிரதமர் மோடி தத்தெடுத்த கிராமங்களும் விலக்கில்லை.
பிரதமர் மோடி இதுவரை தத்தெடுத்த கிராமங்களின் எண்ணிக்கை 8. இந்த எட்டு-ம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி பகுதியில் அமைந்துள்ள கிராமங்களாகும். அதாவது, பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள கிராமங்களாகும்.
ஒரு நாட்டின் பிரதமருடைய தொகுதி என்ற போதிலும், “முன்மாதிரி கிராமத் திட்டம்” நடைமுறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவுறும் நிலையிலும், அக்கிராம மக்களின் வாழ்வியலில் எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை.
குறிப்பாக, தோமரி என்கிற பகுதியில், வறுமையில் துவண்டு வாடும் மக்கள், தங்க வீடுகள் இன்றி, இருக்கின்ற கற்களை பொறுக்கி சுவராக எழுப்பி, பிளாஸ்டிக் உரைகளை வைத்து மூடிக்கொண்டு அதற்குள் வாழ்கின்றனர்.
தங்கும் இடத்திற்கே இந்நிலை என்றால், அடிப்படை வசதிகள் மேலும் வருந்தத்தக்க நிலையில் தான் உள்ளது. உட்கொள்ளும் குடிநீர் கலங்கலாகவும், கழிவறையில் நீரே இல்லாத நிலையும் தான் மிச்சமாக இருந்து வருகிறது.
இவ்வாறு தன் தொகுதியையே காக்கத்தவறும் ஒரு பிரதமருக்கு, எவ்வாறு நாட்டைக் காக்க இயலும் என்று தேசிய அளவில் விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
Also Read
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!