தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று பேரணி மேற்கொண்டாலும், கருப்பு-சிவப்பு முன் ‘காவி’ மங்கியேப்போகும்!

பா.ஜ.க.விற்கு பெரும் சவாலாக விளங்கும் தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவை, காவி திரை கொண்டு மூடிவிடலாம் என கங்கணம் கட்டி திரிகிறார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று பேரணி மேற்கொண்டாலும், கருப்பு-சிவப்பு முன் ‘காவி’ மங்கியேப்போகும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மோடி என்ற ஒரு தனிநபரின் கருத்தியலை முழுமையாக அறியாத நிலையிலும், அவரை கதாநாயகனாக நினைத்துக் கொண்டும், கடவுளாக எண்ணிக்கொண்டும் வாழ்பவர்கள் வட மாநிலங்களில் ஏராளம் இருக்கின்றனர்.

கலவரம், கொலை, கொள்ளை, பொருளாதார பின்னடைவு, மதப்பரப்பல், காவி அரசியல், இந்துத்துவ ஆதிக்க உணர்வு உள்ளிட்ட சமத்துவ இறையாண்மைக்கும், அரசியலைப்பிற்கும் எதிரான பல நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு கூட்டத்திற்கு முன்னோடியாக செயல்படும் இடத்தில் மோடி இருக்கிறார்.

எனினும், அவரின் தந்திரத்தன்மையால், நாட்டின் சிக்கல்கள் குறித்து, குறிப்பாக பா.ஜ.க உண்டாக்குகிற சிக்கல்கள் குறித்து வாய் திறக்காமல், கனவு உலகில் இந்தியா எவ்வாறு இருக்கும் என்ற எண்ணத்தை, உண்மையில் நடப்பது போல உவமையாக காண்பித்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் குட்டிக்கரணங்கள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் செல்லுபடியாகததையடுத்து, தென் மாநிலங்களிலேயே குடியேறிவிட்டார்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், தென் மாநிலங்களின் சிக்கல் குறித்து வருத்தம் கூட தெரிவிக்காத ஒருவர்; மக்கள் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை சந்தித்த போது, நேரத்தை ஒதுக்கி பார்வையிட கூட வருகை தராத ஒருவர்; தற்போதைய அரசியல் இலாபத்திற்காகவும், தேர்தல் காரணத்திற்காகவும் தமிழ்நாட்டில் பேரணி, மாநாடுகள் என புதிதாக அக்கரைக்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டை போல, கேரளாவும் பா.ஜ.க.விற்கு கடும் அச்சமூட்டும் மாநிலமாக விளங்குவதால், அங்கும் காவி ஊர்திகளை எடுத்துக்கொண்டு, பணம் கொடுத்து ஆட்களை கூட்டிக்கொண்டு பேரணி மேல் பேரணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று பேரணி மேற்கொண்டாலும், கருப்பு-சிவப்பு முன் ‘காவி’ மங்கியேப்போகும்!

காட்சியிலேயே, இது பொய்யான கூட்டம் என்று வெளிப்படும் வகையில், பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்கும் பலர், நிகழ்வின் போதே கலைந்து செல்லும் காணொலிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இவ்வாறு, செல்லுபடியாகாது என அறிந்தும் பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிற மோடி, வடக்கில் இருந்த செல்வாக்கையும் இழந்து வருகிறார். விவசாயிகளை வஞ்சிப்பதும், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதும், சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறை வலுப்பதும், பா.ஜ.க.வின் மீது மக்களை எரிச்சலடைய செய்துள்ளது.

தென்னிந்தியாவிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே எந்த நன்மையும் செய்யாத பிரதமர் நரேந்திர மோடி போன்ற
பாசிசவாதிகளை அஞ்சாமல் எதிர்க்கொண்டு வீழ்த்தும் நெஞ்சுரம் கொண்ட தமிழ்நாட்டிற்கு தான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் போல், திராவிட மாடல் சிந்தனையும் தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியாவெங்கும் எதிரொலிக்கட்டும்.

banner

Related Stories

Related Stories