India
பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!
குஜராத் மாநில எல்லைக்கு உட்பட கடல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கடற்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சென்றது. இதைக் கவனித்த கடலோர காவல்படை உடனே அந்த படகை பிடிக்க முயன்றனர். இதை அறிந்த அப்படகு அவர்களிடம் இருந்து சிக்காமல் தப்பிக்க முயன்றது.
இருந்தும் கடலோர காவல்படையினர் அப்படகை சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அப்படகில் சோதனை செய்தபோது இதில் ரூ.480 கோடிக்குப் போதைப் பொருள் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அதில் இருந்து 4 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் அரபிக்கடலில் இரண்டாவது பெரிய போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை இதுவாகும். பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3,300 கிலோ போதைப் பொருள் பிறமுதல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலமான குஜராத்தான் போதைப் பொருள் கடத்தலுக்கு முக்கிய இடமாக இருக்கும் நிலையில் ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பதுபோன்று வேண்டும் என்ற பா.ஜ.கவினர் பொய் பேசி வருவது இந்த பறிமுதல் சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!