India
மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? : ஆபத்தை தெளிவாக எடுத்துச் சொன்ன ப.சிதம்பரம்!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை இம்முறை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒன்றியத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், "நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமர் கோயில் திறப்பு ஒரு காரணியாக இருக்குமா என்பதைக் காலம்தான் சொல்ல முடியும்.
மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும். எதேச்சதிகாரத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்வார்கள். இந்தியா கூட்டணி உருவானதால் பா.ஜ.க அச்சத்தில் உள்ளது. இதனால்தான் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது " என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!