இந்தியா

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க 30 ஆயிரம் கண்ணீர் புகைக் குண்டு வாங்கும் மோடி அரசு : அதிர்ச்சி தகவல்!

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக 30,000 கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு ஆர்டர் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க 30 ஆயிரம் கண்ணீர் புகைக் குண்டு வாங்கும் மோடி அரசு : அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இதற்காக, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டனர். இவர்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போலிஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

மேலும் விவசாயிகளைத் தடுக்கும் வகையில் டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் சுவர்கள் வைத்துத் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன. தொடர்ந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு வருகிறது.

இதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று சிங்கு எல்லையில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று விவசாயிகள் கண் பார்வையை இழந்துள்ளனர். போலிஸாரின் கொடூர தாக்குதல்களை எதிர்த்துத் தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கா 30,000 கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு ஆர்டர் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் மீது தனது பாசிச கோர முகத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு காட்டி வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories