India
பெரியார் பிறந்தநாள் : தலித் சமூகத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிந்த உ.பி அரசு.. குவியும் கண்டனம் !
தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் தந்தை பெரியாரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக 4 தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் என்ற பகுதியில் உள்ளது குராரா என்ற கிராமம். இங்கு கடந்த 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை தலித் சமூகத்தை சேர்ந்த சிலர் கொண்டாடினர். அப்போது பெரியாரின் கருத்துகள், சிந்தனைகளை மக்களுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும் பெரியாரால் ஏற்பட்ட நலத்தை எடுத்து கூறி வந்தனர்.
இதனால் ஆவேசப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் அமர் சிங், டாக்டர் சுரேஷ், அவ்தேஷ், அசோக் வித்யார்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலத்தில் இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!