India
”பா.ஜ.கவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி போருக்குத் தயார்”... மல்லிகார்ஜூன கார்கே பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மும்பையில் நேற்று "இந்தியா" கூட்டணியின் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமுன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடுகளை உடனே தொடங்குவது என்றும், மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடந்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியா கூட்டணிக்கு 14 பேர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா கூட்டணி சார்பில் பிரச்சாரக்குழு, சமூக வலைதள, ஊடகக்குழு செயல்பாட்டுக்குழு உள்ளிட்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் அனைவரது நோக்கம் ஒன்றுதான். விலைவாசியை குறைப்பது, வேலையின்மையை ஒழிப்பது. சமையல் எரிவாயு விலை ரூ.1000க்கு மேல் உயர்த்திவிட்டு, ரூ.200 குறைத்து நாடகமாடுகின்றனர்.
பா.ஜ.க அரசுக்கு எளியோர் மீது அக்கறை இல்லை. பணக்காரர்களை பற்றியே கவலை கொள்கிறது. கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் தோறும் போராட்டம் நடத்தப்படும். மத்திய புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறது பா.ஜ.க அரசு. இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது. அந்த போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!