இந்தியா

இந்தியா கூட்டணி - 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு.. திமுக சார்பில் டி.ஆர்.பாலு MP : மேலும் நான்கு குழு!

இந்தியா கூட்டணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி - 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு.. திமுக சார்பில் டி.ஆர்.பாலு MP : மேலும் நான்கு குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மும்பையில் நேற்று "இந்தியா" கூட்டணியின் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா கூட்டணி - 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு.. திமுக சார்பில் டி.ஆர்.பாலு MP : மேலும் நான்கு குழு!

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமுன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடுகளை உடனே தொடங்குவது என்றும், மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடந்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு 14 பேர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

1. கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்),

2. டி.ஆர்.பாலு (DMK),

3. சரத் பவார் (NCP),

4. ஹேமந்த் சோரன் (JMM)

5.அபிஷேக் பானர்ஜி (TMC)

6. சஞ்சய் ராவத் (Shiv Sena)

7. தேஜஸ்வி யாதவ் (RJD)

8. லல்லன் சிங் (JDU)

9. ராகவ் சாத்தா (AAP)

10. ஜாவேத் அலி கான் (Samajwadi)

11. டி.ராஜா (CPI)

12. உமர் அப்துல்லா (NC)

13. மெகபூபா முப்தி (PDP)

14. சி.பி.எம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)

மேலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரச்சாரக்குழு, சமூக வலைதள, ஊடகக்குழு செயல்பாட்டுக்குழு உள்ளிட்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

banner

Related Stories

Related Stories