இந்தியா

நாங்க ரெடி.. நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டி: INDIA கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமுன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாங்க ரெடி.. நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டி: INDIA கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மும்பையில் நேற்று "இந்தியா" கூட்டணியின் கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாங்க ரெடி.. நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டி: INDIA கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமுன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடுகளை உடனே தொடங்குவது என்றும், மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடந்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் "ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சாதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்." என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories