India

சந்திரயான் 1-2-3ல் பணியாற்றிய 3 முக்கிய நபர்கள்.. இஸ்ரோவில் சாதிக்கும் தமிழர்கள் - யார் இவர்கள்?

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் இன்று மாலை 5 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் இத்தகைய முயற்சிக்கு உலக நாடுகள் பாராட்டுத் தெரிவித்து வரும் வேலையில் சந்திரயான் - 1,2, 3 விண்கலத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்கள் மூன்று பேருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சந்திரயான் 1 இதில் முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. நிலவு மனிதன் என அழைக்கப்படும் இவர்தான் சந்திரயான் 1 விண்கலம் மூலம் நிலவின் நீர் இருப்பதை கண்டறிந்து இந்தியாவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்தவர்.

சந்திரயான் 2 திட்டத்தை தயாரித்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வனிதா முத்தையா இவர் நிலவின் தென் துருவ பகுதிக்கு செல்வதற்கு இஸ்ரோ மூலம் சந்திரயான் 2019ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. திட்டமிட்டு தரையிரங்கிய போதும் இறுதியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தோல்வி அடைந்தது.

சந்திரயான் 3

வீரமுத்துவேல், இவர் சந்திரயான் 3 திட்ட இயக்குனராக வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். இவரது குழு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தை ஏவியுள்ளது. இந்தியாவின் மூன்று முக்கிய திட்டங்களிலும் தமிழர்கள் பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘சந்திரயான் 3’ : பிரகாஷ் ராஜின் பதிவால் தொடரும் சர்ச்சை.. உண்மையில் கிண்டல் செய்தாரா? - விளக்கம் என்ன?