India
இந்தியா கேட்கிறது.. பதில் சொல்லுங்கள் பிரதமரே?: நாடாளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி போராட்டம்!
மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 82 நாட்களாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.
மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்குப் பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் ஒன்றிய அரசு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவையை ஒத்திவைத்து வருகிறது.
இதையடுத்து 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மணிப்பூர் சென்று ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர். குடியரசுத் தலைவரைச் சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் முன்பு "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி அமைத்த பிறகு நடைபெறும் முதல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் நாடாளுமன்றம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் "நாடாளுமன்ற அவை கூடியிருக்கும் போது வெளியே நின்று பிரதமர் உரை நிகழ்த்துவது அவமானம். மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளிக்க வேண்டியது அவரின் கடமை" என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!