India
தாறுமாறாக சென்ற கார்.. 5 வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்: புதுச்சேரியில் நடந்தது என்ன?
புதுச்சேரி கீரப்பாளையம் பகுதியில் தாறுமாறாக வந்த கருப்பு நிற கார் ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி வாலிபர்கள் உடனே காரை விரட்டிச் சென்றனர். அப்போது எதிரே வந்த ஐந்து இருசக்கர வாகனங்களை இடித்து கொண்டு கார் வேகமாக சென்றது. இதில் ஒரு இருசக்கர வாகனம் காரின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையம் அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பின்னர் காரை விரட்டி வந்த பொதுமக்கள் காரில் இருந்த ஐந்து வாலிபர்களையும் பிடித்து வெளியே இழுத்து தர்ம அடிகொடுத்தனர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து ஐந்து பேரையும் மீட்ட அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சென்னையை சேர்ந்த சுனில், ஸ்ரீநாத், ஆஷிக் திலீப், எபிநேசர் ஆகிய 5 நண்பர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்து நன்றாக மது குடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். மது குடித்துவிட்டே காரை வேகமாக ஒட்டிச்சென்றதால் இந்த விபத்து நடந்தது தெரிந்தது. இதையடுத்து போலிஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!