இந்தியா

ஜோடியாக தற்கொலை செய்துகொண்ட சிறுவன், சிறுமி.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. தெலுங்கானாவில் சோகம் !

காதலித்து வந்த சிறுவர் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோடியாக தற்கொலை செய்துகொண்ட சிறுவன், சிறுமி.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. தெலுங்கானாவில் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலங்கானா மாநிலம், சித்திப்பேட் அருகிலிருக்கும் லட்சப்பேட்டை என்னும் கிராமத்தில் 17 வயது சிறுவனும், 16 வயது சிறுமி ஒருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், கடந்த சில மாதங்களாக இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் இந்த காதல் விவகாரம் குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இரு வீட்டாரும் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . மேலும் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்துமாறு கூறியதோடு, இருவரையும் இனி சந்தித்துக்கொள்ளக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

இதனால் இருவரும் கடுமையான மனஉளைச்சரில் இருந்த நிலையில், தங்கள் காதலை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என பயப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று அந்த சிறுவனின் பெற்றோர் வெளியூர் சென்றுள்ளனர்.

ஜோடியாக தற்கொலை செய்துகொண்ட சிறுவன், சிறுமி.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. தெலுங்கானாவில் சோகம் !

அப்போது தனது காதலியை வீட்டுக்கு வரவழைத்த சிறுவன் அங்கு யாரும் இல்லாத நிலையில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சிறுவனின் பெற்றோர் வீட்டுக்கு வந்துபார்த்த போது இருவரும் சடலமாக தொண்டுகொண்டிருந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து வந்த சிறுவர் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories