India

வேக்ஸ் செய்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நஷ்டஈடு கோரிய பெண்.. நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன ?

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள சந்திரா நகரில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அவரின் நண்பர் ஒருவரின் அறிவுரை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்புறுப்பில் உள்ள முடியை எடுக்க தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஸ்பா ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

அங்கு பிறப்புறுப்பில் உள்ள முடியை அகற்றுவதற்காக பிரேசிலியன் வாக்ஸிங் முறையை தேர்வு செய்துள்ளார். இதற்கு 4,500 ரூபாயை கட்டணமாக கொடுத்துள்ளார். பின்னர் ஸ்பா ஊழியர் அந்த பெண்ணுக்கு வாக்ஸிங் செய்ய தொடங்கியுள்ளார்.

அப்போது வாக்ஸ் அதிக சூடாக இருப்பதாகவும், வாக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் எரிவதாகவும் அந்த பெண் ஸ்பா ஊழியரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பகுதியில் வாக்ஸ் செய்யும்போது எரிவது சகஜம்தான் என்றும், அது குறித்து கவலைப்படவேண்டாம் என்றும் ஸ்பா ஊழியர் கூறியுள்ளார்.

ஆனால், வாக்ஸை பிறப்புறுப்பில் இருந்து அகற்றும்போது வாக்ஸ்வுடன் சருமத்தின் தோலும் உரிந்து அந்த பெண்ணுக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணுக்கு பிறப்புறுப்பில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் ஸ்பா உரிமையாளர் மீது புகார் தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடந்துள்ளது.

அந்த விசாரணையில், அப்பெண்ணுக்கு ஏற்பட்ட காயத்துக்கு 30,000 ரூபாயும், உளவியல் பிரச்னையை ஏற்படுத்தியதற்காக 20,000 ரூபாயும், மருத்துவச் செலவுகளுக்காக 20,000 ரூபாயும் என மொத்தம் 70,000 ரூபாயை 30 நாள்களுக்குள் அந்த பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என ஸ்பா உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: "சட்டத்தை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” -நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP கடிதம் !