India
பீகார் :சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. தவறை மறைக்க செய்த கொடுஞ்செயலால் அதிர்ச்சி !
பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்று பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த பிற சிறுமிகளை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளார். மேலும், இந்த சிறுமியிடம் பேசி அவரை மட்டும் யாரும் இல்லாத இடத்துக்கு தனியே அழைத்துசென்றுள்ளார்.
அங்கு சென்றவர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், அதனை தடுக்க அங்கிருந்த களிமண் மற்றும் சேற்றை கொண்டு சிறுமியின் பிறப்புறுப்பில் தடவி ரத்தம் வழிவதை தடுத்துள்ளார்.
நெருநேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராத நிலையில், சிறுமியின் பெற்றோர் சிறுமியுடன் விளையாடியவர்களிடம் விசாரித்தபோது ஒரு இளைஞர் அந்த சிறுமியை தனியே அழைத்துச்சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கூறிய இடத்துக்கு அக்கம் பக்கத்தாருடன் சிறுமியின் உறவினர்கள் சென்றபோது அங்கு சிறுமியும் அந்த இளைஞரும் இருப்பது தெரியவந்தது.
அதோடு அந்த இளைஞர் சிறுமிக்கு செய்துவந்த கொடுமையும் அறிந்த அவர்கள் தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’