இந்தியா

சகோதரருடன் பேசிக்கொண்டிந்த பெண்.. காதலர் என சந்தேகித்து இருவரையும் மரத்தில் கட்டி தாக்கிய ஊர் மக்கள் !

சகோதரருடன் பேசிகொண்டிந்த பெண்ணையும் அவரின் சகோதரரையும் காதலர் என்ற சந்தேகத்தின் பேரில் மரத்தில் கட்டிப்போட்டு தாக்கிய பொதுமக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரருடன் பேசிக்கொண்டிந்த பெண்.. காதலர் என சந்தேகித்து இருவரையும் மரத்தில் கட்டி தாக்கிய ஊர் மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள பாமண்டா என்னும் கிராமத்தில் ரமேஷ் என்பவர் தனது மனைவி கலாவதி (வயது 21) என்பவருடன் வசித்து வருகிறார். கலாவதியின் சகோதரரான பிஹாரிலால் என்பவர் தனது சகோதரியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அவர் சென்ற நேரம் காலாவதியின் கணவர் ரமேஷ் வெளியே சென்றிருந்ததால் வீட்டிற்குள் சகோதரனும், சகோதரியும் சிரித்துபேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை வெளியில் இருந்து கேட்ட சில கணவர் வெளியே சென்றநேரத்தில் காதலனுடம் காலாவதி இருப்பதாக அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர்.

சகோதரருடன் பேசிக்கொண்டிந்த பெண்.. காதலர் என சந்தேகித்து இருவரையும் மரத்தில் கட்டி தாக்கிய ஊர் மக்கள் !

இந்த செய்தி கணநேரத்தில் கிராமத்தில் பரவ அனைவரும் ஒன்று கூறி காலாவதியின் வீட்டுக்கு சென்று இருவரையும் வெளியே வரக்கூறியுள்ளனர். இருவரும் வெளியே வந்ததும் கிராம மக்கள் சேர்ந்த அவர்களை காதலரகள் என கூறி தாக்கியுள்ளனர்.

ஆனால், நாங்கள் சகோதர, சகோதரி என அவர்கள் இருவரும் பலமுறை கூறியும் அதனை ஏற்கமறுத்த கிராமமக்கள் அவர்களை தொடர்ந்து தாக்கி இருவரையும் அங்குள்ள மரத்தில் கட்டி கட்டையால் அடித்துள்ளனர். இருவரும் கெஞ்சி கேட்ட நிலையிலும் கிராம மக்கள் ஏற்காமல் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

சகோதரருடன் பேசிக்கொண்டிந்த பெண்.. காதலர் என சந்தேகித்து இருவரையும் மரத்தில் கட்டி தாக்கிய ஊர் மக்கள் !

அப்போது அங்கிருந்த ஒருவர் காலாவதியின் கணவர் ரமேஷுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அப்போது பிஹாரிலால் உண்மையிலேயே எனது மனைவியின் சகோதரர்தான் என்றும், அவர்களை அடிக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னரே இருவரையும் அடிப்பதை கிராமமக்கள் நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் வந்து கட்டப்பட்டிருந்த காலாவதி மற்றும் பிஹாரிலாலை விடுவித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக கிராமமக்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories