India
போன் மூலம் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மகனால் சிக்கிய தந்தை.. பஞ்சாபில் பரபரப்பு !
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் டி.ஏ.வி பப்ளிக் என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் வெடிகுண்டு மிரட்டலும், பள்ளி தலைமை ஆசிரியருக்கு துப்பாக்கி சூடு மிரட்டலும் வந்தது. இதையடுத்து இது குறித்து பள்ளி நிர்வாகம் காவல் துறையில் புகாரளிக்க, அவர்கள் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த பள்ளியில் இரவு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது பள்ளியில் எந்த வெடிகுண்டும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் அந்த மிரட்டலை விடுத்தது அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
மீண்டும் அந்த பள்ளியை தொலைபேசி வாயிலாக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் கணித தேர்வை செய்வதற்காக மாணவன் ஒருவன் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் அந்த மாணவன் தனது தந்தையின் மொபைல் போனில் இருந்து மிரட்டல் விடுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!