India
மனைவியைத் திட்டியதால் ஆத்திரம்.. தம்பியை கார் ஏற்றி கொலை செய்த அண்ணன்: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவரது தம்பி ஏடு கொண்டலு. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இதில் அண்ணன் வெங்கடேஸ்வரலுக்கு திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். தம்பி ஏடு கொண்டலு மட்டும் தனது தாயாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாகப் பேச அண்ணன் வீட்டிற்குத் தம்பி சென்றுள்ளார். அப்போது வெங்கடேஸ்வரலு வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார். பிறகு ஏடு கொண்டலு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த மனைவி நடந்தவற்றைக் கணவனிடம் தெரிவித்துள்ளார். மனைவியை ஆபாசமாகத் திட்டியதால் தம்பியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதன்படி நேற்று ஏடு கொண்டலு சாலையில் நடந்து சென்றபோது அவர் மீது அண்ணன் வெங்கடேஸ்வரலு கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஸ்வரலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த தம்பியை அண்ணனே கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?