India
டெல்லியில் அரை நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு.. போலிஸ் தீவிர விசாரணை!
டெல்லி அடுத்த குருகிராமில் உள்ள நாதுபூர் பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது குறித்துதெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இறந்த இளம் பெண் யார் என்பது குறித்த விவரங்களை அரிய அவரின் படங்களை போலிஸார் மற்ற காவல்நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். டெல்லியில் அரை நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!