India
காணாமல் போன கிளியை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு.. பேனர் வைத்து தேடும் குடும்பத்தின் பாச போராட்டம்!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் விலங்கின. மற்றும் பறவையின் ஆர்வலர் ரவி. இவரது குடும்பத்தினரும் விலங்கு இனங்கள் மற்றும் பறவை இனங்களை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.
இவர்கள் தனது வீட்டில் ‘ருஸ்துமா’ என்ற பெயரிடப்பட்ட இரண்டு ஆப்பிரிக்க சாம்பல் நிற அரிய வகை கிளிகளைச் செல்லமாக வளர்த்து வந்தார். அந்த கிளிகளும் இவர்கள் குடும்பத்துடன் மிகுந்த பாசத்துடன் வளர்ந்து வந்தது.
இந்நிலையில் ஜூலை 16 ம் தேதி முதல் இரண்டு கிளிகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களிலும் அந்த கிளியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த கிளி கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் காணாமல் போன கிளையைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு தருவதாகக் கூட்டின் அருகே பேனர் வைத்துள்ளனர். அதில், இங்குள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறங்கள் பால்கனிகள், மொட்டை மாடிகள் மற்றும் மரங்களின் கிளைகளில் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வெகுதூரம் செல்ல முடியாது, எங்களால் வலியைத் தாங்க முடியவில்லை. கிளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பணம் அந்த இடத்திலேயே வழங்கப்படும் என நூதன விளம்பர சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
ஆண்டுதோறும் இந்த இரண்டு கிளிகளின் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் ஒரு கிளி காணாமல் போனதிலிருந்து அவரும் அவரது குடும்பத்தார் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.
குடும்பமே காணாமல் போன கிளியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!