இந்தியா

சாலையில் படுத்திருந்த மாடு.. சுங்கச்சாவடியில் அதிவேகமாக மோதிய ஆம்புலன்ஸ்: பதறவைக்கும் CCTV காட்சிகள்!

சுங்கச் சாவடியில் மோதிய ஆம்புலன்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் பதறவைத்துள்ளது.

சாலையில் படுத்திருந்த மாடு..  சுங்கச்சாவடியில் அதிவேகமாக மோதிய ஆம்புலன்ஸ்: பதறவைக்கும் CCTV காட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவர் அருகே அடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜன லட்சுமண நாயக். இவர் உடல் நலக்குறைவு காரணமாக பட்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் குந்தாப்புரா வில் உள்ள தனியா மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து உடுப்பி மாவட்டம் பைந்தூர் எல்லைக்குட்பட்ட சிரூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது மாடு ஒன்று சாலையில் படுத்துக் கொண்டிருந்துள்ளது. மேலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வருவதை பார்த்தவுடன் சாலையில் படுத்திருந்த மாட்டை விரட்டினர்.

சாலையில் படுத்திருந்த மாடு..  சுங்கச்சாவடியில் அதிவேகமாக மோதிய ஆம்புலன்ஸ்: பதறவைக்கும் CCTV காட்சிகள்!

அதற்குள் எதிர்பாராதவிதமாக வேகமாகவந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அதன் ஓட்டுநர் நிறுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாகச் சுங்கச் சாவடி மீது மோதி ஆம்புலன்ஸ் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லட்சுமணனநாயக் அவரது மனைவி ஜோதி நாயக்,உறவினர்களான மஞ்சுநாத மாதேவநாயக், லோகேஷ் நாயக் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த பதறவைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories