India
ஆசைக்கு மறுத்த நண்பனின் மனைவியை கொலை செய்த நபர்.. போலிஸிடம் காட்டிக் கொடுத்த ‘செருப்பு’ : நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள டோம்பிவலி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி சுப்ரியா ஷிண்டே. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் விஷால் காவத். இவர் அடிக்கடி கிஷோர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இதனால் இந்த குடும்பத்துடன் நண்பர்போல் விஷால் பழகி வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்கு சுப்ரியா ஷிண்டே செல்லவில்லை என அப்பகுதியில் வசிப்பர் ஒருவர் அவரது கணவர் கிஷோருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கிஷோர் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போன் எடுக்கவில்லை. இதனால் வீட்டிற்கு வந்துபார்த்த போது, சுப்ரியாவைக் காணவில்லை. பின்னர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால், கிஷோர் மற்றும் விஷால் இருவரும் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் வீட்டிற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது, வீட்டிலிருந்த ஷோபா வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த போலிஸார் அதைக் கிழித்துப் பார்த்தனர்.
அப்போது, சடலமாக சுப்பியா ஷிண்டே இருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலிஸார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று வீட்டின் வெளியே ஒரு செருப்பு இருந்ததாக கூறியுள்ளனர்.
அது யாருடையது என போலிஸார் விசாரணை செய்தபோது இவர்கள் வீட்டிற்கு வந்து செல்லும் விஷாலுடையது என்பது தெரிந்தது. இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது
இதில், சம்பவத்தன்று விஷால் வழக்கம் போல் கிஷோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுப்ரியா ஷிண்டே மட்டும் தனியாக இருந்துள்ளார். நீண்ட நாளாக அவர் மீது இவருக்கு ஆசை இருந்துள்ளது. இதனால் தனியாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட அவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சுப்ரியா சத்தம்போட்டுள்ளார்.
இதனால் விஷால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வீட்டில் இருந்த ஷோபாவில் மறைத்துவைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று, நண்பருடன் சேர்ந்து அவரது மனைவியை காணவில்லை என போலிஸில் புகார் கூறி நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!