India

“EMI செலுத்துபவரா நீங்கள்?.. இன்று முதல் ‘ஆட்டோ டெபிட்’ முறை கிடையாது” : புதிய விதிமுறைகள் என்ன?

கடன் தவணைத் தொகையை ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுத்துக் கொள்ளும் ஆட்டோ டெபிட் முறை, ஏடிஎம் கார்டின் ரகசிய எண் தேவையின்றி 5 ஆயிரம் வரை எடுத்துக் கொள்வது போன்ற பரிவர்த்தனைகள் தற்போது நடைமுறையில் இருக்கிறது.

‘வாடிக்கையாளரின் அனுமதியின்றி ஆட்டோ டெபிட் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என அதற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியிம் இந்த நடவடிக்கைக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

கடந்த 2009ம் ஆண்டு வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளை நெறிப்படத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது ரிசர்வ் வங்கி. அதில், “டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அனைத்தும் Additional Factor Authentication' அங்கீகாரத்தை 2021-ம் ஆண்டின் மார்ச் 31-ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும்” என அறிவித்து காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

மேலும் பல நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் கால வரையறையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி நேற்றோடு அந்த கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இந் நிலையில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உருவாக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

Also Read: தேவையின்றி பணம் வசூலிப்பதாக புகார் : இன்று முதல் டெபிட் /கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் அமல்!

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

அதன்படி இன்று முதல் வங்கிகளுக்கான ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் வருகிறது. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் உங்கள் வங்கி எண் அல்லது கிரெடிட் கார்டு கொடுத்து ஒவ்வொரு மாதம் ஆட்டோ டெபிட் முறையில் பணம் எடுக்கும் வசதியை மேற்கொள்ளப்பட்டது.

அலைபேசிக்கட்டணம், மின்சாரக் கட்டணம், குடிநீர் இல்லை வேறு ஏதாவது ஆன்லைன் பத்திரிகைகளுக்கு கூட சந்தா கட்டியிருந்திருக்கலாம். இனி அவை எல்லாம் ஆட்டோடெபிட் ஆகாது.

இனி, தவணைத் தொகை எடுக்கப்படும் தேதிக்கு ஒருவாரத்திற்கு முன்பாக, வாடிக்கையாளரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலமும், மின்னஞ்சல் மூலமும் வங்கிகள் தகவல் அனுப்ப வேண்டும்.

வாடிக்கையாளர்கள், இதன் அடிப்படையில், தொகைகளை எடுக்க அனுமதி அளிக்கவும் அல்லது தொகையின் அளவை திருத்தி அமைக்கவும் வகை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள், அதை சரியாக கவனித்து பணம் கட்டாவிட்டால், சேவையை இழக்க நேரிடும். குறித்த தேதிக்குள் லோன் கட்ட தவறினால் அதுக்கு வேறு அபராதம் கட்டவேண்டும்.

குறிப்பாக மருத்துவக்காப்பீடு, ஆயுள்காப்பீடு, வாகனகாப்பீடு, நீங்கள் லோன் EMI கட்டி வருபவராக இருந்தால் வங்கியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

Also Read: “அனிதா உள்ளிட்டோரின் உயிராயுதம் வெல்லும்” : நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டுடன் இணையும் வட மாநிலங்கள்!