India

“பாலியல் குற்றவாளியின் காணிக்கையை எந்த கடவுளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்” : கேரள சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் மனநில பாதிக்கப்பட்ட நிலையில், தனது மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாலையில் திரிந்துள்ளார். இதனைக் கவணித்த சமூக ஆர்வலர் ஒருவர், கேரள பெண்கள் பாதுகாப்பு மைத்திற்கு தொடர்புக்கொண்டு உதவி கோரினார்.

இதனையடுத்து கேரள பெண்களுக்கான ஹெல்ப்லைன் ‘வனிதா செல்’லைச் சேர்ந்தவர்கள் அந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அந்தப் பெண்ணிடம் மனநல மருத்துவர்கள் ஆலோசனை நடத்தியத்தில் சாமியார் ஒருவரால் அந்தப் பெண்ணுக்கு நடந்த அவலம் குறித்து தெரியவந்துள்ளது.

திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் ஆனபிறகு கணவனால் கைவிடப்பட்ட வருத்தத்தில் இருந்த அந்தபெண் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சாமியார் ஒருவர் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்தபெண் மற்றும் அந்தப் பெண்ணினுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது அந்த பெண்ணின் முதல் குழந்தையான பள்ளி சிறுமிக்கு சிறார் வதைக் கொடுமையைக் கொடுத்துள்ளார்.

மேலும் பல நேரங்களில் சிறுமியின் தாய், தங்கை மற்றும் தம்பி முன்னிலையிலேயே சிறார் வதை செய்துள்ளார் அந்த சாமியார். ஒருவருடத்திற்கு மேலாக இந்த சிறார் வதையை சாமியார் செய்துவந்ததாகவும், இதுதொடர்பாக வெளியே யாரிடமாது சொன்னால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் ‘வனிதா செல்’ நிர்வாகிகள் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் சாமியாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “ ஒரு ஆண் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கைவிடம் போது, அந்தப் பெண்ணை மட்டுமல்லா, ஆதரவற்றுப் போகும் குழந்தைகளையும் இரையாக்க இன்றைய சமூகத்தில் கழுகுகள் அதிகம் காத்திருக்கின்றன.

இந்த வழக்கில் சிறுமி ஒருவர் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் தன் தம்பி தங்கையின் முன்னிலையிலேயே சாமியாரால் சிறார் வதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது எவ்வளவு கொடூரமானது. அந்த சாமியாரின் வணக்கத்தையும் காணிக்கையும் எந்த கடவுளும் ஏற்றுக்கொள்ளமட்டார். அவர் எப்படி கடவுளுன் ஊடகமாக இருக்கமுடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “தாய், தம்பி முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் ‘சிறார் வதைக்கு’ ஆளான சிறுமி” : கேரள சாமியாரின் கொடூர செயல் !