இந்தியா

“தாய், தம்பி முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் ‘சிறார் வதைக்கு’ ஆளான சிறுமி” : கேரள சாமியாரின் கொடூர செயல் !

கேரள மாநிலத்தில் மனநில பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு சிறார் வதை செய்த சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தாய், தம்பி முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் ‘சிறார் வதைக்கு’ ஆளான சிறுமி” : கேரள சாமியாரின் கொடூர செயல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் மனநில பாதிக்கப்பட்ட நிலையில், தனது மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாலையில் திரிந்துள்ளார். இதனைக் கவணித்த சமூக ஆர்வலர் ஒருவர், கேரள பெண்கள் பாதுகாப்பு மைத்திற்கு தொடர்புக்கொண்டு உதவி கோரினார்.

இதனையடுத்து கேரள பெண்களுக்கான ஹெல்ப்லைன் ‘வனிதா செல்’லைச் சேர்ந்தவர்கள் அந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அந்தப் பெண்ணிடம் மனநல மருத்துவர்கள் ஆலோசனை நடத்தியத்தில் சாமியார் ஒருவரால் அந்தப் பெண்ணுக்கு நடந்த அவலம் குறித்து தெரியவந்துள்ளது.

திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் ஆனபிறகு கணவனால் கைவிடப்பட்ட வருத்தத்தில் இருந்த அந்தபெண் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சாமியார் ஒருவர் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

“தாய், தம்பி முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் ‘சிறார் வதைக்கு’ ஆளான சிறுமி” : கேரள சாமியாரின் கொடூர செயல் !

அங்கு அந்தபெண் மற்றும் அந்தப் பெண்ணினுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது அந்த பெண்ணின் முதல் குழந்தையான பள்ளி சிறுமிக்கு சிறார் வதைக் கொடுமையைக் கொடுத்துள்ளார்.

மேலும் பல நேரங்களில் சிறுமியின் தாய், தங்கை மற்றும் தம்பி முன்னிலையிலேயே சிறார் வதை செய்துள்ளார் அந்த சாமியார். ஒருவருடத்திற்கு மேலாக இந்த சிறார் வதையை சாமியார் செய்துவந்ததாகவும், இதுதொடர்பாக வெளியே யாரிடமாது சொன்னால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் ‘வனிதா செல்’ நிர்வாகிகள் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் சாமியாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories