India
டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்களா? எந்த தகவலும் இல்லையென சோற்றில் மறைத்த ஒன்றிய அரசு!
எட்டுமாத போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் அரசிடம் இல்லை என்று விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தைப் தொடங்கி நாளையுடன் எட்டு மாதங்கள் முடிகிறது. இந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்தும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் அரசுக்கு உள்ளதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 11 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சட்டத்தின் பிரிவுகள் குறித்த பிரச்னைகளை விவசாயிகள் விவாதிக்க முன்வராமல், முழுமையாக சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றே விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்துள்ளது குறித்த கேள்விக்கு அரசிடம் அது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை என்று அமைச்சர் பதிலளித்துள்ளார். அமைச்சரின் இந்த பதில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அதிர்ச்சியடையப்வைத்துள்ளது.
கடந்த 8 மாத கால போராட்டத்தில் 550க்கும் மேலான விவசாயிகள் கடும் குளிரிலும், வெயிலிலும் உடல் நலம் பாதிக்கப்பட்டும், போராட்ட களத்தில் அரசின் பிடிவாத்தை எதிர்த்து தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!