India
மகளிர் தினத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பெண்கள்... பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதுவரை மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் போராட்டம் 100வது நாளையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்நிலையில், தங்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக முக்கிய தினங்களில் தங்களின் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றனர். குடியரசு தினத்தன்று பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்தினர்.
இந்நிலையில், மகளிர் தினத்தையொட்டி 40 ஆயிரம் பெண் விவசாயிகளை டெல்லி போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் இன்று மகளிர் தினத்தில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றைய போராட்டங்களுக்கு பெண்களே தலைமை தாங்கியுள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே பெண்கள் அதிக அளவில் பங்கேற்று மத்திய மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், "இந்தியாவின் விவசாயத்தில், பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைத்துள்ளது" என தெரிவித்துள்ளனர். முன்னதாக, மகளிர் தினத்தையொட்டி, அமெரிக்க இதழான டைம் பத்திரிக்கை பெண் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற காட்சியை அட்டைப் படமாக வெளியிட்டு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?