India
“மற்ற துறைகள் குறித்து பேசும் போது எச்சரிக்கையுடன் பேசுங்கள்”: சச்சின் டெண்டுல்கருக்கு சரத்பவார் அறிவுரை!
மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 நாட்களாக தொடர் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். ஆனாலும் தற்போது வரை பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை.
இதற்கு மாறாக சொந்த நாட்டு விவசாயிகளையே தீவிரவாதி என முத்திரை குத்தி அவதூறு செய்கிறது. மத்திய அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
உலக பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாத மோடி அரசு தனக்கு ஆதரவாளர்களாக இருக்கும் சினிமா பிரபலங்களையும், கிரிகெட் ஜாம்பவான் என மக்களால் கொண்டாடப்பட்ட முன்னாள் கிரிகெட் விரர்களையும் வைத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக பேசி வைத்து வேடிக்கைப் பார்த்து வருகிறது.
அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத சச்சின், விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டு பிரபலங்களை நோக்கி எதிர்க்குரல் எழுப்பியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சச்சினின் கருத்துக்கு நடிகர் சித்தார்த், நடிகை டாப்ஸி உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி தற்போது, விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசும்போது எச்சரிக்கையாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புனேயில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அளித்த பேட்டியில், “விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர்.
குறிப்பாக, சச்சின் டெண்டுல்கருக்கு என்னுடைய ஆலோசனை என்னவென்றால், வேறு துறையை பற்றி அவர் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை அவமானப்படுத்தும் நோக்கில் அவர்களைத் தீவிரவாதிகள், காலிஸ்தானிகள் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அவர்கள் நமக்கு சாப்பாடு போடும் விவசாயிகள். எனவே இவ்வாறுபுண்படுத்துவது சரியான நடைமுறை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!