India
கொரோனா பாதிப்பு 81 லட்சமாக உயர்வு - பலி எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 81,37,119 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 551 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,21,641 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், ஒரே நாளில் 59,454 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 74,32,829 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 5,94,386 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!