தமிழ்நாடு

“மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம் : அரசு உண்மையை மூடி மறைக்கிறது” : நாமக்கல் MP குற்றச்சாட்டு!

மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு 40 சதவீதம் கமிஷனே இது போன்ற கட்டிட குறைபாடுக்கு காரணம் என நாமக்கல் எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

“மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம் : அரசு உண்மையை மூடி மறைக்கிறது” : நாமக்கல் MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் சத்தியமூர்த்தி ரூ கோ நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொண்டு வருகிறது.

45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மருத்துவ கல்லூரிக்கு 2-ம் தளம் கட்டும் பணி நடைபெற்ற வந்த நிலையில், நேற்று இரவிலும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் நுழைவாயில் முகப்பு அமைக்க கான்கீரிட் தளம் அமைக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்த தூண் மற்றும் முன்பகுதி முழுவதுமாக சரிந்து கான்கீரிட் தூண்கள் இடிந்தது.

அப்போது, பணியிலிருந்த வட மாநில தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம் : அரசு உண்மையை மூடி மறைக்கிறது” : நாமக்கல் MP குற்றச்சாட்டு!

இதனையடுத்து சம்பவ இடத்தில் தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இதனையடுத்து தமிழக அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “நடு இரவில் பணி நடைபெறவில்லை. காலையில் தான் பணிகள் நடைபெற்றது. அப்போது கான்கீரிட் போட அமைக்கப்பட்ட தடுப்பு தூணில் குறை உள்ளது என அதிகாரிகள் கண்டுயறிந்து அதனை இடித்து விட்டனர்” என பெய்யான தகவலை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேள்வி ஒன்றே எழுப்பினர், மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டிட பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் போது, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆய்வு செய்த போது நடைபெற்று வரும் பணிகள் தரமில்லாமல் உள்ளது. அதனை அகற்றி விட்டு தரமாக கட்டிட பணிகள் நடத்த வேண்டும் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து இருந்ததை சுட்டிக்காட்டினர்.

“மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம் : அரசு உண்மையை மூடி மறைக்கிறது” : நாமக்கல் MP குற்றச்சாட்டு!

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய கூடாது என்று கூறினர்.

இந்நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தர்.

அப்போது, “மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகள் துவக்கத்திலேயே கட்டுமான நிறுவனத்தின் பணிகள் தரமில்லை என கூறியிருந்தேன். இது குறித்து பொதுப்பணி துறை செயலருக்கும், நாமக்கல் அரசு விழாவிற்கு வந்த முதலமைச்சரிடமும் நேரிலும் கடிதம் மூலமும் தெரிவிக்கப்பட்டது.

“மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம் : அரசு உண்மையை மூடி மறைக்கிறது” : நாமக்கல் MP குற்றச்சாட்டு!

இதனையடுத்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்தனர். தற்போது இரவு பணிகள் நடந்து வந்த போது, நள்ளிரவு 1.30 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு கட்டிட ஒப்பந்ததாரரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த விபத்து அதிகாலை 6.30 மணி அளவில் நடந்தது என அமைச்சர் பி.தங்கமணி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூறுவது தவறு. இதனை மூடி மறைக்க பார்க்கிறார்கள். சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் ஆம்புலனஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது காயம் அடைந்தவர்கள் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இதற்கு அங்கு உள்ள கண்காணிப்பு கேமிரா சாட்சி பொய்யான தகவலை தெரிவித்த அமைச்சர் தங்கமணி விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்த விவகாரத்தில் அரசு இனி சரியான தொழில்நுட்ப வல்லுநர்களை அமர்த்தி பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

“மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம் : அரசு உண்மையை மூடி மறைக்கிறது” : நாமக்கல் MP குற்றச்சாட்டு!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திட்டப்பணிகளை ஆய்வு செய்யக்கூடாது என கூறும் அமைச்சர் பி.தங்கமணியும் மக்கள் பிரதிநிதி தான். அவர் ஆய்வு கூட்டம், பணிகள் ஆய்வு நடத்துவது ஏன்.

அமைச்சர் பி.தங்கமணி தொகுதியான பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில், 4 ஊராட்சி பகுதியில் 28 பணிகள் குறைகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் கட்டடிட பணிகளுக்கு பணி ஆணை வழங்க ஆட்சியாளர்களுக்கு 40 சதவீதம் கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அனைத்து விபரங்கள் என்னிடத்தில் உள்ளது.

ஆட்சியாளர்களுக்கு 40 சதவீதம் கமிஷன் வழங்குவதால் தரமில்லாமல் பணிகள் நடைபெற்று மக்களின் வரி பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனார். இது இல்லை என்றால், அமைச்சர் என்னுடன் ஆய்வுக்கு வரதயாரா என கேள்வி எழுப்பினார் அதன் அடிப்படையில் தான் தரமில்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்ததுக்கு காரணம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories