India

“கொரோனா பேரிடர்: இனி இருசக்கர வாகன விற்பனை வெகுவாக அதிகரிக்கும்” - ஹீரோ மோட்டோகார்ப் தகவல்! #CoronaCrisis

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது 2019-20 க்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி Covid-19 காலம் ஒரு குறுகியகால சாவலுக்குள் ஆழத்தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இதே நிலைதான்.

அந்த நிறுவன தலைவர் பவன் முஞ்சால் அதன் பங்குதாரர்களுடன் எதிர்கால திட்டங்கள் குறித்து குறிப்பிடுகையில் "இன்னமும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவிலும் அதேபோன்று உலக சந்தைகளிலும் அப்படியே உள்ளன" என்றார்.

மேலும், தனது நிறுவனத்தின் தடத்தை கடந்த ஐந்து வருடங்களில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பதித்துள்ளதாக குறிப்பிட்டார். மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு துறையில் மற்ற இருசக்கர வாகன உற்பத்தியாளர்களைவிட கடந்த ஐந்து வருடங்களில் அதிக கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இந்த கலந்தாலோசனை கூட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், கிட்டத்தட்ட 100 மில்லியன் இருசக்கர வாகனங்களை விற்பனைப்படுத்தி இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்பனையில் உலக சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பரவலின் காரணமாக தனிமனித பயணத்திற்கான வாகனத்தையே மக்கள் தேர்ந்தேடுப்பார்கள். அதற்கான தேவையே இந்த நிதியாண்டில் அதிகமாக இருக்கும் என்று இருசக்கர வாகன உற்பத்தியின் மேஜர் குறிப்பிட்டார்.

ஹீரோ மோட்டார் கார்ப் சமீபத்தில் பேஷன் ப்ரோ மற்றும் கிளாமர் 125 போன்ற பைக்குகளை அறிமுகப்படுத்தியது. அது புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்களை ஈர்க்குமெனவும், மேலும் இந்நிறுவனம் முதன் முதலாய் 160சிசி பைக்கை எக்ஸ்ட்ரீம் 160R என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் இது ஒரு முக்கிய அறிமுகமாக இருக்கும். கூடுதலாக BS6 வாகன உற்பத்தியிலும் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுபட உள்ளது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மற்றுமொரு உலக சாதனைக்கு தயாராகி வருவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

Also Read: கொரோனா அச்சுறுத்தல்.. பொருளாதார வீழ்ச்சி : தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் திட்டம்?