அரசியல்

கொரோனா அச்சுறுத்தல்.. பொருளாதார வீழ்ச்சி : தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் திட்டம்?

தபால் ஓட்டுகளில் குளறுபடிகள் நடப்பதாகக் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்.. பொருளாதார வீழ்ச்சி : தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் திட்டம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கத் தேர்தல்களைத் தள்ளிப்போடுவதாகச் சூசகமாகத் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் காலையில் ட்வீட் செய்த டிரம்ப் தபால் ஓட்டுகள் பதிவு செய்வதில் மோசடிகள் நடைபெறுகின்றன மீண்டும் குற்றச்சாட்டு வைத்தார்.

மேலும் மக்கள் சரியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க முடியும் வரை தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவருக்குமான தபால் ஓட்டுகளைக் கருத்தில் கொண்டால், 2020 தேர்தல் என்பது இதுவரை நடந்த தேர்தல்களிலேயே குழப்பமான, மோசடியான தேர்தலாக இருக்கும்.

மேலும் அமெரிக்காவுக்கு இது மிகப் பெரிய அவமானம். மக்கள் சரியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தலைத் தள்ளிவைக்கலாமா?” எனத் தெரிவித்துள்ளார். தபால் ஓட்டுகளில் குளறுபடிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ள அவர் அதற்கான ஆதாரங்களை இதுவரை வெளியிடவில்லை.

கொரோனா அச்சுறுத்தல்.. பொருளாதார வீழ்ச்சி : தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் திட்டம்?

இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் 32.9% வேகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல், பொருளாதாரம் வீழ்ச்சி தொடர்பான செய்திகள் அமெரிக்க அரசுக்கு எதிராக தொடர்ந்து வெளிவரும் நிலையில், அதிபர் டிரம்ப் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்.. பொருளாதார வீழ்ச்சி : தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் திட்டம்?

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் டைலர் கொண்டு வந்த சட்டப்படி, அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் வரும் முதல் திங்களுக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று நடத்தப்படவேண்டும் என்று உள்ளது.

அதன்படி தற்போது தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்றால், அச்சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யாமல் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக சட்டம் இயற்ற முடியாது. இருப்பினும் டிரம்பின் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் தேர்தல் ஒத்திவைப்பு சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல்.. பொருளாதார வீழ்ச்சி : தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் திட்டம்?

இதையடுத்து டிரம்புக்கு அமெரிக்கத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவு எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories