India

“ம.பி உயரதிகாரி தனக்கு கொரோனா இருப்பதை மறைத்தாரா?” : வதந்திக்கு முற்றுப்புள்ளி - என்ன நடந்தது? #FactCheck

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் உடனே மாநில அரசுக்கு தகவல் தெரிவித்து தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும்; தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனை அனைத்து மாநில அரசுகளும் கடைபிடித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் பல்லவி ஜெயின் கோவில், தனது மகனுக்கு வீட்டில் இருந்தே கொரோனா சிகிச்சை அளித்ததாகவும், தனக்கு கொரோனா இருந்தபோது அதனை மறைத்து செயல்பட்டதாகவும் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இதனிடையே, மத்திய பிரதேசத்தின் மாநில முதன்மைச் செயலாளர் பல்லவி ஜெயின் கோவிலுக்கு கொரானா என உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை பெறுகிறார். மேலும் அவருடன் பணியாற்றிய அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் கூட மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை பணிகளை துரிதமாக செய்வதாக அம்மாநில முதல்வரால் பாராட்டப் பெற்றவர் பல்லவி ஜெயின் கோவில். அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான குற்றச்சாட்டை பல்லவி ஜெயின் மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவரது மகன் மார்ச் 16 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் முதற்கட்ட சோதனைகளுக்குப் பிறகு பிற பயணிகளைப் போலவே வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு வழங்கிய ஆலோசனையின் படி, கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதற்கான 12 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இல்லை. இதனையடுத்து ஏப்ரல் 4ம் தேதி மற்றும் கூடுதல் இயக்குனர் டாக்டர் வீணா சின்ஹா ​​இருவரும் கொரானா சோதனை மேற்கொண்டனர்.

அதில், பல்லவி ஜெயினுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் உட்பட குடும்பத்தார் அனைவரையும் ‘அதன்பிறகு’ பரிசோதித்தில் எவருக்கும் கொரானா தொற்று இல்லை என முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரு அதிகாரி, நோய்க்கான அறிகுறிகளை கவனிக்காமல் விட்டது எப்படி , அதன் பிறகும் சந்திப்புகளைத் தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டு விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம், தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸும் வழக்கமான நடைமுறைக்காகவே என்று கூறப்படுகிறது.

இவரது குடும்பத்தினரிடம் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைப் பார்வையிடல்கள், தொடர்ந்த சந்திப்புகள் மூலம் இவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதன்பிறகு நடந்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பான விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்லவி ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நான் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டு தனிமைப்படுத்திக் கொணுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மாநில மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பல்லவி ஒரு திறமையான அதிகாரி. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த திறமையாகச் செயல்படுகிறார் என சில தினங்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் கூட இவரைப் பாராட்டினார்.

அப்படியான ஒருவரை பொய்யான தகவல்களைப் பரப்பி புறம் பேசுவது வருத்தமளிக்கிறது. தங்களது சுய விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்துவிட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் கால நேரம் பார்க்காமல் உழைத்து வருகிறார்கள். அப்படி உழைக்கும் அதிகாரியின் உழைப்பைப் பலியிட வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: FACT CHECK : கொரோனா சிகிச்சைக்காக தனது சொகுசு ஹோட்டலையே மருத்துவமனையாக்க முன்வந்தாரா ரொனால்டோ?