India

டெல்லி வன்முறையை தூண்டிய கபில் மிஸ்ராவுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: குற்றவாளியை பாதுகாக்கும் மோடி அரசு!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை கலைக்க பா.ஜ.க தலைவர் எடுத்த முயற்சி பெரும் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

இந்த வன்முறைக்கு பா.ஜ.கவினரும், இந்துத்வா அமைப்புகளுமே காரணம், குறிப்பாக வன்முறை நடைபெற்ற அன்று பா.ஜ.கவினரின் சிஏஏ ஆதரவு பேரணியில் கபில் மிஸ்ராவின் வெறுப்புப் பேச்சு காரணமென்றும் குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது வழக்கு பதியவும், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லியில் பா.ஜ.கவினர் செய்த அராஜகத்தை அடுத்து கண்டித்து சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே பா.ஜ.கவில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில், கலவரத்தை தூண்டிய வகையில் பேசிய கபில் மிஸ்ராவுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ” டெல்லி வன்முறையைத் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகியான கபில் மிஸ்ராவுக்கு கொலை மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது.

அதனால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலிஸார் அவரின் பாதுகாப்புக்கு வழங்கட்டுள்ளது.” என உள்துறை அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ள டெல்லி போலிஸ் தெரிவித்துள்ளனர்.

அமைதி வழியில் போராடிய அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு தராத டெல்லி போலிஸ், 48 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கபில் மிஸ்ரா பேசியதும் குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கை, குற்றவாளிக்கு அரசே பாதுகாப்பு வழங்குவதாக உள்ளது என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து விமர்த்தி வருகின்றனர்.

Also Read: Delhi Riots : 903 பேர் கைது; 254 பேர் மீது FIR பதிவு... பா.ஜ.கவினரை இதுவரை தொடாத டெல்லி போலிஸ்!