இந்தியா

Delhi Riots : 903 பேர் கைது; 254 பேர் மீது FIR பதிவு... பா.ஜ.கவினரை இதுவரை தொடாத டெல்லி போலிஸ்!

டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 903 பேர் கைது செய்யப்பட்டும், 254 பேர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Delhi Riots : 903 பேர் கைது; 254 பேர் மீது FIR பதிவு... பா.ஜ.கவினரை இதுவரை தொடாத  டெல்லி போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியின் ஷாஹீன்பாக்கை தொடர்ந்து வடகிழக்கு பகுதியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் அறவழியில் தங்களது போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது, பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் வன்முறையை தூண்டும் பேச்சால் அங்கு கலவரம் வெடித்தது.

ஆனால், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை திடீரென உண்டாகவில்லை என்றும், இந்துத்வா கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதாகவும் அம்பலமானது. இந்த வன்முறையில் 45 பேர் பலியாகியும், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Delhi Riots : 903 பேர் கைது; 254 பேர் மீது FIR பதிவு... பா.ஜ.கவினரை இதுவரை தொடாத  டெல்லி போலிஸ்!

இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 903 பேரை கைது செய்துள்ள டெல்லி போலிஸ், 254 பேர் மீது FIR நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பா.ஜ.கவின் அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா, ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்டோர் மீது எவ்வித நடவடிக்கையும், முதல் தகவல் அறிக்கைக் கூட பதியாமல் உள்ளது டெல்லி காவல்துறை.

banner

Related Stories

Related Stories