DMK Government
"சமூக நீதியைப் பாதுகாக்க தி.மு.க ஆட்சி மலரும்" : ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைகோ பேச்சு!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை அன்மையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த அறிக்கையில் சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும், மதச்சார்பின்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.கவும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ம.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் சாய்த்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் பா.ஜ.கவுக்கு, அ.தி.மு.க முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
எனவே, சமூக நீதியைப் பாதுகாக்க, இந்துத்வா சக்திகளுக்குத் துணையாக இருக்கும் ஊழல் அ.தி.மு.க அரசைச் சாய்த்து, தி.மு.க கூட்டணி ஆட்சி மலர தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளோம். எடப்பாடி அரசின் மீதான 97 பக்க குற்றப் பத்திரிகையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்துள்ளார். அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்ளாட்சித் துறை அமைச்சர், மின்துறை அமைச்சர், உணவு அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை முதல்வர் பதிலளிக்கவில்லை.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா , கிராமசபைக் கூட்டங்கள், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், விடியலை நோக்கி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் லட்சக்கனான மக்களைச் சந்தித்து வருகிறார். இப்போதே தி.மு.க வின் வெற்றி உறுதியாகிவிட்டது. கருத்துக்கணிப்புகளும் இதையே தான் கூறுகின்றன. தி.மு.க தேர்தல் அறிக்கையைச் செயல்படுத்தும்போது தமிழகத்தில் ஒரு பொற்கால ஆட்சியாக அமையும்" என்றார்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!