Election 2024
அரசு பணிகளில் 50% முதல் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரை... பெண்களுக்கான காங்கிரஸின் 5 உத்தரவாதங்கள் என்னென்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் ஆளும் பாஜகவும் ஓரங்கட்டுவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி, தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு, ஹரியானா, குஜராத், டெல்லி, கோவா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. தமிழ்நாட்டிலும் அண்மையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு சுமூகமாக நிறைவடைந்தது.
தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தற்போது பெண்களுக்கு என்று பிரத்யேகமாக 5 உத்தரவாதங்களை அறிவித்துள்ளது. இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதனை அறிவித்துள்ளார். அந்த 5 திட்டங்கள் விவரம் பின்வருமாறு :
1. வறிய குடும்பங்களை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் வருடந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
2. ஒன்றிய அரசு பணிகளில் 50%க்கும் மேல் பெண்களுக்கு வழங்கப்படும்.
3. சுகாதாரம் மற்றும் சத்துணவு பணியாளர்களின் மாத வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
4. எல்லா பஞ்சாயத்துகளிலும் பெண்களின் உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வு அளிக்கும் ஒரு அலுவலர் நியமிக்கப்படுவார்.
5. எல்லா மாவட்ட தலைமையிடங்களிலும் உழைக்கும் மகளிருக்காக குறைந்தபட்சம் ஒரு விடுதியேனும் கட்டப்படும்.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!