DMK
தி.மு.க-வில் இணைந்த எடப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ... கூட்டம்கூட்டமாக கழகத்தில் இணையும் மாற்றுக்கட்சியினர்!
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டி, வேட்பாளர்கள் தேர்வுப் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெற்றிக் கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு அமைப்புகளும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ பா.ம.க-வைச் சேர்ந்த கணேசன் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஐ.கணேசன் மற்றும் அவரது மகன் மருத்துவர் ஐ.ஜி.நாகராஜன், எம்.எஸ். (ஆர்த்தோ) ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
சிவகங்கை மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் எம்.எல்.ஏ முன்னிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலர், தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளரும், செஞ்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!