திமுக அரசு

#Election2021 : 187 தொகுதிகளில் களமிறங்கும் ‘உதயசூரியன்’ - தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டி?

தி.மு.க கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை எட்டி, கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரைக்கு தயாராகி வருகின்றன.

#Election2021 : 187 தொகுதிகளில் களமிறங்கும் ‘உதயசூரியன்’ - தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து எதிராகச் செயல்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை கேள்வி எதுவும் கேட்காமல் ஆதரித்து வந்தது அ.தி.மு.க அரசு.

மத்திய - மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகளை தி.மு.க தொடர்ந்து வலிமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கினார். மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மாபெரும் வெற்றியையும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 6ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சந்திக்கத் தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டி, வேட்பாளர்கள் தேர்வு பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை மற்றும் மக்கள் விடுதலை கட்சிக்கு தலா 1 தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறாக, கூட்டணி கட்சிகளுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கொ.ம.தே.க 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்களில் 13 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவது உறுதிடாகியுள்ளது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை 187 தொகுதிகளில் உதயசூரியன் களமிறங்குகிறது.

banner

Related Stories

Related Stories