தி.மு.க

கை ரிக்‌ஷா அவலத்தை ஒழித்த கலைஞர் : மனித கழிவுகளை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க தலைவர்!

முத்தமிழறிஞர் கலைஞர் பாணியில் சமூக நீதியை நிலைநாட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

கை ரிக்‌ஷா அவலத்தை ஒழித்த கலைஞர் : மனித கழிவுகளை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் 1969 முதல் 1971ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே அமைந்தது.

அப்போது தலைவர் கலைஞர் சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலான பற்பல திட்டங்களை அறிவித்து அதனை உடனே செயல்படுத்தவும் செய்தார். கலைஞரால் செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டங்களும் காலம் கடந்து இந்திய நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

அவ்வகையில் ஏழை எளிய மக்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாராம் கொடுக்கும் வகையில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென வாரியம், கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது என எண்ணற்ற முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தார் தலைவர் கலைஞர்.

அதில் அடித்தட்டு மக்களை திகைக்க வைத்த திட்டம்தான் சைக்கிள் ரிக்‌ஷா திட்டம். ரிக்‌ஷா வண்டிகளை பயன்படுத்துவது 1960களில் மிகவும் வழக்கத்தில் இருந்தது. மனிதரை மனிதரே கையால் இழுத்துச் செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்று எண்ணி ரிக்‌ஷா இழுப்போருக்கு சைக்கிள் ரிக்‌ஷாவை வழங்கி சிறப்பித்தார் தலைவர் கலைஞர்.

பல ஆண்டுகளாக தன்னுள் குடிக்கொண்டிருந்த சிந்தனையை செயல்படுத்தி வெற்றியும் கண்டவர் தலைவர் கலைஞர். அதன் சாட்சியாக பராசக்தி படத்தில் கலைஞரின் வசனத்தில் “முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்குப் பதிலா நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்சா இழுத்து கூனிப் போயிருக்கானே” என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், தலைவர் கலைஞர் வழியில் நின்று தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டிக் காத்துக்கொண்டிருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் அறிவித்த திட்டங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மனிதக் கழிகளை மனிதரே அகற்றும் அவலத்தை ஒழிப்பது.

பல்லாண்டுகளாக இந்த அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த அவலத்தை ஒழிக்கும் வகையில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழித்தல் என்ற உறுதிமொழியை தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நீதியை காக்கும் இயக்கும் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories