Cinema
Jailer : “குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை..” - வைரலாகும் ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி !
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் 'ஜெயிலர்'. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படமானது வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ஆடியோ லான்ச் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் உட்பட படக்குழு கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் என்ற பட்டதால் தனக்கு ஏற்பட்ட பிரச்னை அனுபவங்களை ஒரு குட்டி ஸ்டோரி போல் மேடையில் கூறினார். அதுமட்டுமின்றி காகம் - பருந்து கதையும் கூறினார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் பேசுகையில், "தயாரிப்பாளர் தாணு அவர்கள் 1977-ல் எங்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை கொடுத்தார். அப்போது இருந்தே எனக்கு பிரச்னை தான். அப்போவே அந்த பட்டம் எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். உடனே ரஜினி பயந்துவிட்டார் என்று கூறி கிண்டலடித்தார்கள். நான் கடவுள், நல்ல மனிதர்கள் - 2 பேருக்கு தான் பயப்படுவேன்.
அப்போ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார்; கமல் உச்சத்தில் இருந்தார். அவர்கள் இருக்கும்போது எனக்கு அந்த பட்டம் வேண்டாம் என்று எண்ணினேன். இந்த காலத்தில் இருக்கும் 2K கிட்ஸ்களுக்கு நான் பட்ட கஷ்டம் எல்லாம் தெரியாது. அப்போதும் இதே போல் சோசியல் மீடியா இருந்தால், எனது கஷ்டங்கள் தெரிந்திருக்கும். இந்த துறையில நெறய பேரோட வயித்தெரிச்சல் இருக்கும்.
விலங்குகளில் அதிக சேட்டை செய்வது குரங்கு. அதேபோல் பறவைகளிலே அதிக சேட்டை செய்வது காகம். ஒரு காகம் ஒரு இடத்துல சும்மா இல்லாம, அங்க, இங்கனு தாவிக்கிட்டே இருக்கும். பருந்தோ, ஒரு உயரத்தில் பறந்துகொண்டே அமைதியாக இருக்கும். ஆனால் இந்த காகம் சும்மா இல்லாம, தானும் உயர பறந்து, கழுகை கொத்தும். இருப்பினும் அந்த பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது; மாறாக இன்னமும் மேலே பறக்கும்.
எனவே காகமும் பருந்து உயரத்துக்கு பறக்க ஆசைப்படும். ஆனால் அதால் முடியாமல் கீழே விழுந்துவிடும். அதேபோல் தான் நம் வாழ்க்கையும். நம்மை யாரவது எதிர்த்தால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைத்து முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். உடனே ஊடகங்களில் ரஜினிகாந்த் அவரை காகமாக சொன்னார்; இவரை பருந்தாக சொன்னார் என்று ஏதாவது எழுதுவார்கள்.
'குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை. இந்த ரெண்டும் சொல்லாத ஊருமில்லை. எனவே நாம நம்ம வேலையை பார்த்துக்கொண்டு போயிக்கிட்டே இருப்போம்" என்றார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!