சினிமா

படம் பார்க்க வந்தவர்களுக்கு Tissue பேப்பர்.. VDKவின் தம்பி ரசிகர்களின் செயலால் இணையத்தில் சிரிப்பலை !

தெலுங்கில் வெளியான 'பேபி' படத்தை காண வந்த பொதுமக்களுக்கு ரசிகர்கள், Tissue பேப்பர் வழங்கியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

படம் பார்க்க வந்தவர்களுக்கு Tissue பேப்பர்.. VDKவின் தம்பி ரசிகர்களின் செயலால் இணையத்தில் சிரிப்பலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல தென்னிந்திய நடிகரான விஜய் தேவரகொண்டா 2001 ம் ஆண்டு வெளியான 'நுவ்விலா' என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், 'கீதா கோவிந்தம்' படத்தில் ரஷ்மிகா மந்தனாவுடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தார். இதன்மூலம் இவருக்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளமானோர் உருவாகினர்.

படம் பார்க்க வந்தவர்களுக்கு Tissue பேப்பர்.. VDKவின் தம்பி ரசிகர்களின் செயலால் இணையத்தில் சிரிப்பலை !

தற்போது வரை திரையுலகில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவர்கொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரைக்கொண்டாவும் ஒரு திரை பிரபலம் ஆவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் 'பேபி'. சாய் ராஜேஷ் நீளம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், மெளனிகா ரெட்டி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படம் பார்க்க வந்தவர்களுக்கு Tissue பேப்பர்.. VDKவின் தம்பி ரசிகர்களின் செயலால் இணையத்தில் சிரிப்பலை !

தெலுங்கு திரைப்படமான இந்த படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தற்போது தெலுங்கில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கிறது. முக்கோண காதல் கதையை மையமாக கொண்டுள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. வெளியாகி 2 நாட்களிலே சுமார் 17 கோடி வரை வசூலித்துள்ளது. அதோடு 12 நாளில் ரூ.71 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த படத்தை காண வரும் பொதுமக்களுக்கு, ரசிகர்கள் சார்பில் Tissue பேப்பர் வழங்கப்பட்டு வருகிறது. காதல் கதையை மையமாக கொண்டுள்ள இந்த படம் ரசிகர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளத்தை வரவைப்பதால், அதனை துடைக்க ரசிகர்கள் Tissue பேப்பர் வழங்கியுள்ளனர்.

பல்லாரி பகுதியில் உள்ள நட்ராஜ் காம்ப்லெக்சில் இருக்கும் சிவா திரையரங்கில், பொதுமக்களுக்கு ரசிகர்கள் Tissue பேப்பர் வழங்குவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் பலவிதமான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories