Cinema
“ஆத்தா நா பாஸ் ஆகிட்டேன்..” -73 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நடிகை.. தள்ளாத வயதிலும் தீவிர முயற்சி!
ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம்; அதற்கு வயது ஒரு தடையில்லை என்று பலரும் தங்கள் வயதான காலத்திலும் பலவற்றை சாதித்து வருகின்றனர். அண்மையில் கூட 60 வயதுக்கு மேல் உள்ள நபர் ஒருவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். மேலும் சிலர் மாநில அரசு தேர்வுகள் எழுதி பாஸ் பண்ணினர்.
இப்படி அடுக்கடுக்காக அதிகமான சம்பவங்கள் கூறிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் தனக்கு வயதானதை கூட பொருட்படுத்தாமல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதாவது கேரளாவை சேர்ந்த குணச்சித்திர நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் பஹத் பாஸில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தில் அபர்ணாவுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அவ்வப்போது படங்களில் நடித்து வந்த இவர், நடிப்புக்கு சிறிது இடைவெளி கொடுத்து படிப்பில் முழு கவனம் செலுத்தினார்.
அந்த வகையில் இவரது மகன் மற்றும் மருமகள் அளித்த ஊக்கத்தினால் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து இவர் அடுத்து 11-ம் வகுப்பு படிக்க ஆசைப்படுகிறார். இதுமட்டுமின்றி அவர் english spoken class-ம் செல்கிறார்.
முன்னதாக இவர் இதே 10-ம் வகுப்பு தேர்வு இரண்டு முறை எழுதியும் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் தனது விடா முயற்சியால் தற்போது எழுதிய தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். வர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி லீனாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பலரும் இவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!