சினிமா

தொடரும் பதான் சர்ச்சை : “ஷாருக்கான் யாருன்னே தெரியாது !..” - அசாம் முதலமைச்சர் அலட்சிய பதிலால் அதிர்ச்சி!

ஷாருக்கான் யார் என்றே தெரியாது என அசாம் முதலமைச்சர் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் பதான் சர்ச்சை : “ஷாருக்கான் யாருன்னே தெரியாது !..” - அசாம் முதலமைச்சர் அலட்சிய பதிலால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படம், வரும் 25-ம் தேதி வெளியாகிவுள்ளது.

திரையரங்கில் வெளியாகும் இந்த படத்திற்காக ஷாருக் ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கினற்னர். ஒவ்வொரு அப்டேட்டும் வரும்போது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.

தொடரும் பதான் சர்ச்சை : “ஷாருக்கான் யாருன்னே தெரியாது !..” - அசாம் முதலமைச்சர் அலட்சிய பதிலால் அதிர்ச்சி!

அந்த வகையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 'Besharam Rang' என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ கும்பல் பலரும் கண்டங்கள் தெரிவித்து வந்தனர்.

தொடரும் பதான் சர்ச்சை : “ஷாருக்கான் யாருன்னே தெரியாது !..” - அசாம் முதலமைச்சர் அலட்சிய பதிலால் அதிர்ச்சி!

தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், வெளியிட்டால் திரையரங்கு கொளுத்தப்படும் எனவும் இந்துத்துவ கும்பல் ஒரு பயங்கரவாதி போல் மிரட்டல் விடுத்தது வருகின்றனர். அதோடு ஷாருக், தீபிகாவின் உருவப்படமும் எரித்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்தபோதிலும், இதனை பெரிதும் கண்டுகொள்ளாத திரைபடக்குழு அடுத்தடுத்து தங்கள் பாடல்களை வெளியிட்டு, இந்துத்துவ கும்பலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை நிரூபித்தது. மேலும் இதன் ட்ரைலர் அண்மையில் 3 மொழிகளிலும் வெளியானது.

தொடரும் பதான் சர்ச்சை : “ஷாருக்கான் யாருன்னே தெரியாது !..” - அசாம் முதலமைச்சர் அலட்சிய பதிலால் அதிர்ச்சி!

வரும் 25-ம் தேதி திரைக்கு காத்திருக்கும் இந்த படமானது, அசாமில் உள்ள கெளஹாத்தி பகுதியில் இருக்கும் திரையரங்கில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்ட்டரை பஜ்ரங் தல் அமைப்பு கிழித்ததோடு, ஷாருக்கான் உருவம் பதிந்த போஸ்ட்டரை தீயிட்டு கொளுத்தினர். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடரும் பதான் சர்ச்சை : “ஷாருக்கான் யாருன்னே தெரியாது !..” - அசாம் முதலமைச்சர் அலட்சிய பதிலால் அதிர்ச்சி!

இந்த சம்பவம் குறித்து நேற்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "இந்த பிரச்னை குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலர் என்னை தொடர்பு கொண்ட போதிலும், ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. அவர் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் அழைத்தால் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு என்ன பிரச்னை என்பதை பார்ப்பேன்." என்று அலட்சியமாக பதிலளித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தன்னை ஷாருக் தொடர்பு கொண்டதாக அசாம் மாநில முதலமைச்சர் ட்வீட் ஒன்று செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், “பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்னை இன்று காலை 2 மணிக்கு தொடர்பு கொண்டு பேசினார். கெளஹாத்தியில் தனது படத்தின் திரையிடலின் போது நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். நாங்கள் விசாரித்து, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories